

மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம் சென்னை ஐஐடியில் கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. அரசின் பொருளாதார கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த அமைப்பு அவ்வபோது கூட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த மாதம் குப்பம் பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஆர்.விவேகானந்தா கோபாலின் சொற்பொழிவு ஐஐடியில் நடை பெற்றது. இது தொடர்பாக இந்த அமைப்பு வெளியிட்ட சுற்றறிக் கையில் “மோடி அரசு இந்துத்வா கொள்கைகளை முன்னெடுத்து செல்கிறது, தொழிலாளர் நலச் சட் டங்கள், 100 சதவீத அந்நிய முத லீடுக்கு அனுமதி உள்ளிட்ட முடிவு களால் கார்ப்பரேட் நிறு வனங்கள் நாட்டை சூறையாட வழி வகுக் கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்து சில மாணவர்கள் மத்திய மனித வளத் துறையிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து ஐஐடி நிர்வாகத்திடம் மத்திய மனித வளத் துறை விளக்கம் கேட்டது. இதைத் தொடர்ந்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை ஐஐடி நிர்வாகம் தடை செய்துள்ளது.
அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு அளிக்கப்பட்ட சலுகை களை தவறாக பயன்படுத்தி யதால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக ஐஐடி மாண வர்கள் பிரிவு தலைவர் எம்.சிவ குமார் மின்னஞ்சல் மூலம் தெரி வித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தின் உறுப்பினரான விமலா கூறும் போது, “எம்.சிவகுமார் ஆரம்பித் தலிருந்தே எங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பெரியார் மற்றும் அம்பேத்கர் என்ற பெயர்கள் அரசியல்தன்மை வாய்ந்தவை, எனவே பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார். நாங் கள் ஏற்கவில்லை. ஆனால், அதே நேரம் விவேகானந்தர் என்ற பெய ரில் வாசிப்பு வட்டம் இயங்கி வரு கிறது. இங்கு ஒவ்வொரு சனிக் கிழமையும் ஆர்.எஸ்.எஸ். வகுப்பு கள் நடைபெறுகின்றன” என்றார்.
இந்நிலையில் ஐஐடி நிர் வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாணவர் அமைப்புகள் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம் இந்த விதிமுறையை மீறியுள்ளது. இதனால், அவர்களின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப் படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
ஐஐடியின் இந்த நடவடிக் கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், மத்திய அரசும், கல்வி நிறுவனமும் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம் சமூக சீர்திருத்த கருத்துகளையும், கல்வியை காவிமயமாக்கும் பாஜக அரசு பற்றியும் விமர்சித்தது. இதனை ஆதிக்க சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மாணவர் வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது சட்ட விரோதமானதாகும்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “ சங் பரிவார் அமைப்புகள் கேள்வி கேட்ட தாலேயே எந்த விசாரணையும் இன்றி, கருத்து சுதந்திரத்தை பறித்த ஐஐடி டீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகனும் இதை கண்டித்துள்ளார்.