

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருந்தாலும் வரும் தேர்தலில் மக்கள் அவரை தோற்கடிக்க வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக டெல்லியில் இருந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சுப்பிரமணியன் சுவாமி, "ஜனநாயக நாட்டில் வழக்குகளில் இத்தகைய திருப்பங்கள் ஏற்படுவது சகஜமே. இது ஒன்றும் இயல்புக்கு புறம்பானது அல்ல.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருந்தாலும் வரும் தேர்தலில் மக்கள் அவரை தோற்கடிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தொடர்வார்கள்" என்றார்.