

கேரள மாநிலம், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற் காக கோவை சிறையில் இருந்து மாவோயிஸ்ட் தம்பதி ரூபேஷ், சைனாவை கேரள சிறப்புப் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் நேற்று அழைத்து சென்றனர்.
கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தென் மாநிலங்கள் தலைவர் ரூபேஷ், இவரது மனைவி சைனா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரூபேஷ், சைனா தம்பதியினர் மீது கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் வழக்குகள் உள்ளன.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்ஸலைட் இயக்கத்தின் முக்கியத் தலைவர் மல்ல ராஜூ ரெட்டி என்பவர், கேரளத்தில் தங்குவதற்கு இடம் அளித்ததாக ரூபேஷ், சைனா மீது வழக்கு உள்ளதால், அவர்களை ஆஜர்படுத்துமாறு எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கோவை மத்திய சிறையில் இருந்து இருவரையும் கேரள உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.