

கூத்தாண்டவர் கோயில் திரு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் திருநங்கைகள் குவிந்துள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு இன்று மிஸ் கூவாகம் போட்டியும், நாளை தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத் தாண்டவர் கோயிலில் கூத் தாண்டவர் திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங் கியது.
கடந்த ஆண்டுகளைவிட குறைவு
இந்த விழாவில் கலந்து கொள்ள திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, சென்னை, பெங்களூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரு நங்கைகள் கூவாகத்துக்கு வருவது வழக்கம். சனிக் கிழமை மாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கை கள் விழுப்புரத்துக்கு வரத் தொடங் கியுள்ளனர்.
இவர்கள் விழுப்புரத்தில் உள்ள விடுதிகளில் தங்கி, இங்கு நடை பெறும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி, நடன போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி களில் பங்கேற்பர். கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளில் ரூ.1,500 ஆக இருந்த ஒரு நாள் வாடகை இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,300 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு மற்றும் விடுதி உரிமையாளர்கள் விடுத்துள்ள சில விதிமுறைகளுக்கு அச்சப்பட்டு திருநங்கைகளின் வருகை குறைந்துள்ளது.