

திருவள்ளூர் அருகே திமுகவினர் வைத்திருந்த பேனர் கிழிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக வினர் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் வரும் 18-ம் தேதி திருவள்ளூரில் நடக்கிறது. இதை முன்னிட்டு, மு.க. ஸ்டாலினை வரவேற்று, திமுகவினர், திரு வள்ளூர் அருகே உள்ள பட்டரைபெரும்புதூரில் பேனர் வைத்திருந்தனர்.
இந்நிலையில், அந்த பேனரை நேற்று மதியம் மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதையறிந்த 75-க்கும் மேற்பட்ட திமுகவினர், பூண்டி ஒன்றிய செயலாளர் அன்பரசு தலைமையில் பட்டரை பெரும்புதூர் டோல்கேட் அருகே நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா போலீஸார் பேனரை கிழித்தவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதையடுத்து பட்டரை பெரும்புதூர், சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் 20 நிமிடத்துக்கு மேல் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.