ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள்: நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள்: நாளை முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர் வுக்கு தனித்தேர்வர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் “தட்கல்” திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவரா ஜன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வு) மே 18-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதிவரை நடைபெற உள்ளது. முதல் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ண யிக்கப்பட்டிருந்த கடைசி தேதி யான ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத் தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக் கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங் களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) மே 8, 9-ம் தேதி களில் பதிவிறக்கம் செய்துகொள் ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து தாங்கள் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வுக்கட்டணம் ரூ.50. மதிப்பெண் சான்றிதழ் முதல் ஆண்டுக்கும், 2-ம் ஆண்டுக்கும் தலா ரூ.100. பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15. சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். ஆன்லைன் கட்டணம் ரூ.50. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக்கட்டணத்தை செலுத்தவும் வசதி செய்யப் பட்டிருக்கிறது.

தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர் கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின் னர் அறிவிக்கப்படும்.

தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in