

பேஸ்புக்கில் பெண் குழந்தைகளை தவறாக சித்தரித்து உருவாக்கப் பட்ட பக்கங்கள் முடக்கப்பட்டன. இதுபோன்ற செயல்களில் ஈடு படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை போரூரைச் சேர்ந்த என்நாக் மோசஸ் என்பவர், மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘பேஸ்புக்கில் ‘சின்ன பொண்ணு வெறியர்கள்’ என்ற பெயரில் பெண் குழந்தைகளை தவறாக சித்தரித்து ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏராளமான இளம்பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள் ளன. தமிழில் ஆபாசமான கருத்து களையும் பதிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவைத்து புகார் பெறப்பட்டது.
இந்தப் புகாரின் முக்கியத்துவம் கருதி உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க சைபர் கிரைம் போலீஸாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மேலும் பேஸ்புக்கில் குழந்தைகளை பாலியல் தொடர்பாகவோ அல்லது மோசமான வகையிலோ சித்தரித்து பக்கங்களை உருவாக்குவோர், பயன்படுத்துவோர், பார்வையிடு வோர், பிறருக்கு அனுப்புவோர் ஆகியோரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்தப் புகாரின் அடிப்படையில், குறிப்பிட்ட பக்கத்தை முடக்கக் கோரி பேஸ்புக் நிர்வாகத்துக்கு போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அந்தப் பக்கத்தை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியது.
இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறிய தாவது:
என்நாக் மோசஸ் என்பவரின் புகாரைத் தொடர்ந்து அவர் தெரிவித்த பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதேபோல பெண் குழந்தைகளை தவறாகச் சித்தரித்து உருவாக்கப்பட்டிருந்த பக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பக்கங்களையும் முடக்கக் கோரி பேஸ்புக் நிர்வாகத்திடம் தெரிவித்தோம். எங்களுடைய கோரிக்கையை ஏற்ற பேஸ்புக் நிர்வாகம், அந்தப் பக்கங்களை உடனடியாக முடக்கியது. பெண் குழந்தைகளை தவறாக சித்தரித்து பக்கங்களை உருவாக்குபவர் களின் முகவரி மற்றும் விவரங் களை வழங்கக் கோரி பேஸ்புக் நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறோம்.
தனிப்படை அமைப்பு
குறிப்பிட்ட பேஸ்புக் பக்கங் களில் ஆபாசமான கருத்துகளை பதிவு செய்தவர்கள் மீதும் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சைபர் குற்றம் மற்றும் சைபர் லேப் தொடர்புடைய போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
7 ஆண்டு சிறை தண்டனை
குழந்தைகளை தீய நோக்குடன் அல்லது பாலியல் தொடர்பான நோக்குடன் பார்ப்பது, புகைப் படங்களை பதிவிறக்கம் செய் வது, மற்றவர்களுக்கு அனுப்பு வது, குழந்தைகள் பற்றி அருவருக்கத்தக்க கருத்துகளை பதிவு செய்வது போன்றவை கொடுங் குற்றங்களாகும். இது போல பேஸ்புக்கில் கணக்கு மற்றும் பக்கம் உருவாக்குபவர்கள், அதில் பெண் குழந்தைகளின் புகைப் படங்களை பார்வையிட்டு விருப்பம் (லைக்) தெரிவிப் பவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
சமூக இணையதளத்தில் முதல் இடத்தில் இருக்கும் பேஸ்புக்கில் உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் கணக்குகள் மற்றும் பக்கங்களை தொடங்கியுள்ளனர். லட்சக்கணக்கானோர் ஆபாச கணக்குகள் மற்றும் பக்கங்களை வைத்துள்ளனர். அதனால், பேஸ்புக் பயன்படுத்தும் பொது மக்கள், ஆபாச கணக்குகள் மற்றும் பக்கங்கள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க லாம். அதன்பேரில் அந்தக் கணக்குகள் மற்றும் பக்கங்கள் முடக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.
மனநல பாதிப்பு
இதுதொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை மனநல மருத்துவர் சந்திரலேகா கூறிய தாவது:
சாதாரண மனிதர்கள் இப்படி யெல்லாம் செய்வதில்லை. வக்கிரபுத்தி கொண்டவர்கள்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவர். இவர்கள், தன்னைவிட வலிமை குறைந்தவர்கள் மற்றும் குழந்தை கள் மீதுதான் தவறாக நடந்து கொள்வர். இதுபோன்ற நபர்கள் குழந்தைகளிடம் பாலியல் தொடர் பான சில்மிஷங்களில் அதிகம் ஈடுபடுவர். பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிப்பர். இது ஒருவிதமான மனநல பாதிப் பாகும். இவர்களிடம் இருந்து குழந்தைகளை பெற்றோர் பாது காக்க வேண்டும். யாராவது தவறாக தொடுவதாகவோ அல்லது தவறாக நடந்து கொள்வ தாகவோ குழந்தை சொன்னால், அதை தட்டிக் கழிக்கக்கூடாது. முக்கியமாக வீட்டுக்கு வரும் உறவினர்கள், டிரைவர்கள், பணி யாளர்கள், பள்ளி ஆசிரியர்களைப் பற்றி குழந்தைகள் சொல்வதை பெற்றோர் கவனமாக கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.