

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த இரு அரசுகளும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், அடுத்தடுத்து தொடர் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாய கடனுக்கான வட்டி உயர்வு, மதவெறிச் செயல்பாடுகள் என மத்திய பாஜக அரசு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கும் மோசமாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை எடுத்துக் கூறவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் மாற்றுத் திட்டத்தை விளக்கவும் மே 5 முதல் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடப்பட உள்ளது. இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக் கும் மக்கள் சந்திப்பு இயக் கத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார்.