4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் எந்தத் துறையிலும் முன்னேற வில்லை. அரசின் கடன் சுமை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மின் உற்பத்திக்காக எந்த புதிய திட்டமும் செயல்படுத்தப் படாததால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் துறை மதிப் பீட்டின்படி தொழில் வளர்ச்சியில் 3-வது இடத்திலிருந்த தமிழகம் தற்போது 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 85 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எந்த தொலைநோக்கு திட்டத்தையும் கடந்த 4 ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆட்சியாளர்களுக்கு விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in