

திருவொற்றியூரில் ஆயுதங் களுடன் சுற்றிய 4 இளைஞர் களை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
திருவொற்றியூர் போலீஸார் விம்கோ நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த 4 இளை ஞர்களை பிடித்து சோதனை செய்தனர். அவர்களில் மூன்று பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ஆயுதங் களை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள், சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த டேனியல் (24), கன்னிக் கோயில் தெருவை சேர்ந்த அஜீத்குமார் (19), பிரகாஷ் (19), பிரவீண்குமார் (19) என்பதும், முன்விரோதம் காரணமாக சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கிராமத் தலைவர் யோவான் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.