சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்கள் மூடல்

ஐகோர்ட்டில் வனத்துறை அறிக்கை தாக்கல்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்கள் மூடல்
Updated on
2 min read

சென்னை: சத்​தி​யமங்​கலம் புலிகள் சரணால​யத்​தில் சட்​ட​விரோத​மாகச் செயல்​பட்டு வந்த 42 ரிசார்ட்​களை மூடி சீல் வைத்​துள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் வனத்​துறை அறிக்கை தாக்​கல் செய்​து உள்ளது.

ஈரோடு மாவட்​டம் சத்​தி​யமங்​கலம் புலிகள் சரணால​யத்​தில் தேசிய வன விலங்​கு​கள் வாரி​யம், மலைப்​பகுதி பாது​காப்பு ஆணை​யம் ஆகிய​வற்​றின் ஒப்​புதல் பெறாமல் சட்​ட​விரோத​மாகச் செயல்​படும் ரிசார்ட்​களை மூட நடவடிக்கை எடுக்​கக் கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்​கத்​தின் நிறு​வன​ரான கற்​பகம், சென்னை உயர் நீதி​மன்​றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், “இந்த புலிகள் சரணாலய பகு​தி​யில் உள்ள கரு​வண்​ண​ராயர் கோயில் திரு​விழா ஆண்​டு ​தோறும் பிப்​ர​வரி, மார்ச் மாதங்​களில் நடை​பெறும். இவ்​விழா​வில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பங்​கேற்​பர்.

திரு​விழாவுக்கு வரும் வாக​னங்​கள் எழுப்​பும் ஒலிமாசு, வனவிலங்​கு​களுக்​கும், வனத்​தின் சுற்​றுச்​சூழலுக்​கும் கடும் பாதிப்பை ஏற்​படுத்​துகிறது. எனவே, இந்த திரு​விழாவுக்கு ஒலி மாசு கட்​டுப்​பாடு​களைவிதிப்​பதுடன், அப்​பகு​தி​யில் சட்​ட​விரோத​மாகச் செயல்​படும் ரிசார்ட்​களை மூட​வும் உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சத்​தி​யமங்​கலம் புலிகள் சரணால​யத்​தில் சட்​ட​விரோத​மாகச் செயல்​படும் ரிசார்ட்​களை மூட வேண்​டும் எனவும், வனப்​பகு​தி​யில் ஒலி மாசுவைக் கட்​டுப்​படுத்த நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை அமல்​படுத்​தி​யது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென்​றும் தமிழக அரசுக்கு உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, வனத்​துறை தரப்​பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்​கறிஞர் டி.சீனி​வாசன், “சத்​தி​யமங்​கலம் புலிகள் சரணால​யத்​தின் சுற்​றுச்​சூழல் பாது​காப்பு பகு​தி​களில் உள்ள 53 ரிசார்ட்கள் மற்​றும் பண்ணை வீடு​களில் சோதனை நடத்​தப்​பட்​டது.

இதில் 11 ரிசார்ட்கள் உரிய அனுமதி பெற்று செயல்​படு​கின்​றன. 42 ரிசார்ட்கள் எவ்​வித அனு​ம​தி​யுமின்றி சட்​ட​விரோத​மாகச் செயல்​படு​வது தெரிய​வந்​தது. அதையடுத்து, அந்த 42 ரிசார்ட்​களும் மூடி சீல் வைக்​கப்​பட்​டுள்​ளது” எனக் கூறி அறிக்கை தாக்​கல் செய்​தார்.

அதற்கு மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எஸ்​.பி.சொக்​கலிங்​கம், அப்​பகு​தி​களில் இன்​னும் பல ரிசார்ட்கள் சட்​ட​விரோத​மாகச் செயல்​பட்டு வரு​கின்றன அந்த ரிசார்ட்கள் மீது இன்​னும் நடவடிக்கை எடுக்​க​வில்​லை.

அதுகுறித்த விவரங்​களை மனு​வாக தாக்​கல் செய்​துள்​ள​தாக தெரி​வித்​தார். அதற்கு வனத்​துறை தரப்​பில், மனு​தா​ரர் குறிப்​பிடும் ரிசார்ட்கள் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது, என தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக புதி​தாக அறிக்கை தாக்​கல் செய்ய வனத்​துறைக்கு 3 வார காலம் அவகாசம் வழங்​கினர்.

அப்​போது மூடப்​பட்ட ரிசார்ட் உரிமை​யாளர்​கள் தரப்​பில், உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை சுட்​டிக்​காட்டி இதுதொடர்​பான மேல்​முறை​யீட்டை விசா​ரிக்க அதி​காரி​கள் மறுப்​ப​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், ரிசார்ட் உரிமை​யாளர்​கள் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​படும் மேல்​முறை​யீட்டு மனுக்​களை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் விசா​ரிக்​கலாம் எனக்​கூறி இந்த வழக்கு விசா​ரணையை ஏப்​.7-க்கு தள்​ளிவைத்​துள்​ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்கள் மூடல்
சென்னை | மூதாட்டிகளிடம் நூதன முறையில் தொடர்ச்சியாக நகைகளை திருடிய நபர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in