தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்டத்தில் மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கடைசி

தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்டத்தில் மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கடைசி
Updated on
1 min read

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளிலும் (சிறு பான்மை பள்ளிகள் தவிர்த்து) மாணவர்களை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், வரும் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றே கடைசி தேதியாகும்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: இலவச கட்டாயக் கல்வி சட்டம் 2009-ன்படி, திருவள்ளூர் மாவட்ட அனைத்து தனியார் சுயநிதி பள்ளி களில் (சிறுபான்மை பள்ளிகள் தவிர) 2015-2016-ம் கல்வி யாண்டில் நுழைவு நிலை வகுப்பு களில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். ஆகவே, 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை, தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அதற் கான விண்ணப்பங்களை, சேர்க்க விரும்பும் பள்ளிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மை கல்வி அலு வலகம், மாவட்ட கல்வி அலுவல கங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ள லாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த பள்ளி களில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை, பள்ளிகளில் சமர்ப் பிக்க முடியாவிட்டால் மாவட்ட கல்வி அலுவலகங்களில் வரும் 18-ம் தேதி மாலை 5 மணிக் குள் சமர்ப்பிக்கலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு, குறைந்தபட்சம் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான சேர்க்கை படிவங்களை பெற இன்றே கடைசி தேதியாகும்.

இவை, தனியார் சிறுபான்மை யற்ற சுயநிதி பள்ளிகளில் வழங்கப் பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலு வலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகம், காஞ்சி புரம் மெட்ரிக் பள்ளிகள் ஆய் வாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் வழங்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in