

அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை ஐஐடி முன்பு நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் அக்கட்சியின் மாண வரணி செயலாளர் இள.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஐஐடியில் செயல் பட்டு வந்த அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம் என்ற அமைப்புக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்தத் தடையை ரத்து செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தடையை ரத்து செய்யக்கோரி திமுக மாணவரணி சார்பில் திங்கள்கிழமை (ஜூன் 1) காலை 10 மணிக்கு சென்னை ஐஐடி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு இள.புகழேந்தி தெரிவித்துள்ளார்.