Published : 31 May 2015 08:52 AM
Last Updated : 31 May 2015 08:52 AM

தனியார் பள்ளிகளில் கல்வி பயில நிதியுதவி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று,10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ- மாணவிகள், அவர்கள் விரும்பும் சிறந்த தனியார் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயில ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 28 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும். நிதியுதவி பெற விரும்பும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ- மாணவிகள் ஜூன் 5-ம் தேதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தங்கள் பெற்றோருடன் சென்று தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x