Published : 21 May 2015 11:17 am

Updated : 21 May 2015 13:51 pm

 

Published : 21 May 2015 11:17 AM
Last Updated : 21 May 2015 01:51 PM

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை

3-19

எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 4 பேர் மாணவர்கள்.

அவர்கள் விவரம் வருமாறு:

மாநிலத்தில் முதல் இடம்: (499/500)

1.ஜெயநந்தனா, சேலம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

2.பாரதிராஜா, பாரனம் அரசு உயர்நிலைப் பள்ளி

3.வைஷ்ணவி.ஆர், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

மாநிலத்தில் இரண்டாவது இடம்: (498/500)

1.மானசா.டி, மதுரை மாவட்டம்- - மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

2.சுவாதி.எஸ், திருப்பூர் மாவட்டம் - பிச்சம்பாளையம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி

3.அஸ்விதா காமாட்சி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி

4.நறுமுகை, சேலம் மாவட்டம் - பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

5.ஹேமப்பிரியா, சேலம் மாவட்டம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

6.சஃபா, தஞ்சாவூர் மாவட்டம் - மதுக்கூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

மாநிலத்தில் மூன்றாம் இடம்: (497/500)

1.பிரீத்தி லாவன்யா.ஜி - நீலகிரி மாவட்டம் - மஞ்சூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி

2.அஞ்சனா பாரதி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி

3.வான்மதி.கே, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

4.வர்ஷினிதேவி, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

5.தமிழரசு.எஸ், நாமக்கல் மாவட்டம் - பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி

6.தினேஷ்ராஜா.ஆர், நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

7.பாலாஜி.எல், தருமபுரி மாவட்டம் - கிருஷ்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி

8.மகேஸ்வரி.எம், தஞ்சாவூர் மாவட்டம் - தாமரைக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி

9.பிரியதர்ஷினி.எஸ், வேலூர் மாவட்டம் - சோழிங்கர் டி.இ.எம். அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

10.ஜீவிதா.பி, காஞ்சிபுரம் மாவட்டம் - அனகாபுத்தூர் - அரசு மேல்நிலைப் பள்ளி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பத்தாம் வகுப்புதேர்வு முடிவு10-ம் வகுப்பு தேர்வு முடிவுபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுஅரசுப் பள்ளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author