

முதல்வர் ஜெயலலிதாவால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல்வராக 5-வது முறையாக நேற்று பொறுப்பேற்ற ஜெயலலிதா, 5 சிறப்பு திட்டங்களுக்கு முதலில் கையொப்பமிட்டார்.
அதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக் கான சிறப்பு திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கியிருந்தார்.
அதே போல், எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் மூலம் குடிநீர் வழங்க 1,274 மையங்களுக்கு ரூ.77.13 கோடி ஒதுக்கி உத்தரவிட் டிருந்தார்.
இந்த இரு சிறப்பு திட்டங்களுக்கும் நிர்வாக ஒப்புதல் நேற்று வழங்கப் பட்டு, அதற்கான அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.