

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. இதில் 500-க்கு 499 மதிப்பெண் எடுத்து 41 மாணவ-மாணவிகள் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
498 மதிப்பெண் பெற்று 192 பேர் 2-ம் இடத்தையும், 497 மதிப்பெண் எடுத்து 540 பேர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
எஸ்எஸ்எல்சி எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைந்தது. பள்ளி மாணவர்கள், தனித்தேர் வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வெழுதியிருந்தனர். இந்த நிலையில், எஸ்எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சென்னை டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவு களையும், ரேங்க் பட்டியலையும் வெளியிட்டார். அப்போது இணை இயக்குநர் எஸ்.உமா, தேவி ஆகியோர் உடனிருந்தனர்.
தேர்வு முடிவின்படி, 500-க்கு 499 மதிப்பெண் பெற்று 41 பேர் முதலிடத் தைப் பிடித்தனர். 41 பேர் முதலிடத்தைப் பெறுவது எஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
498 மதிப்பெண் எடுத்து 192 பேர் 2-ம் இடத்தையும், 497 மதிப்பெண் பெற்று 540 பேர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து சாதனை படைத்தவர்கள் ஆவர். அதேநேரத்தில், தமிழ் மொழி அல்லாமல் பிற மொழிகளை (சம்ஸ்கிருதம், பிரெஞ்சு) ஒரு மொழிப் பாடமாக எடுத்து 5 பேர் 500-க்கு 500 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தேர்வெழுதிய 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 பள்ளி மாணவ - மாணவிகளில் 9 லட்சத்து 85 ஆயிரத்து 940 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி விகிதம் 92.9 சதவீதம். மாணவர்கள் 90.5 சதவீதமும் மாணவிகள் 95.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும் போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகம்.
மதிப்பெண் சாதனையைப் பொறுத்தவரையில், அறிவியல் பாடத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 பேரும், கணிதத்தில் 27 ஆயிரத்து 134 பேரும், சமூக அறிவியலில் 51 ஆயிரத்து 629 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 29-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித் துள்ளது.
கடந்த ஆண்டைவிட 2.2% தேர்ச்சி அதிகரிப்பு
எஸ்எஸ்எல்சி தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.2 சதவீதம் அதிகமாகும்.
சென்னையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்டார். அதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறிய தாவது:
இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 11 லட்சத்து 15 ஆயிரத்து 906 பேர் விண்ணப்பித்திருந்தனர். பள்ளி மாணவர்களாக 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 பேர் தேர்வெழுதினர். இவர்களில் மாணவர்கள் 5 லட்சத்து 33 ஆயிரத்து 43 பேர். மாணவிகள் 5 லட்சத்து 27 ஆயிரத்து 823 பேர்.
தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.9 சதவீதம் ஆகும் (கடந்த ஆண்டு 90.7 சதவீதம்). மாணவர்கள் 90.5 சதவீதம் பேரும், மாணவிகள் 95.4 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு தேவராஜன் தெரிவித்தார்.