தொழில் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு 30 நாட்களில் அனுமதி பெற்றுத்தர சிறப்பு அதிகாரிகள் நியமிக்க உத்தரவு

தொழில் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு 30 நாட்களில் அனுமதி பெற்றுத்தர சிறப்பு அதிகாரிகள் நியமிக்க உத்தரவு
Updated on
1 min read

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு 30 நாட்களுக்குள் தொழில் தொடங்க அனுமதி பெற்றுத் தரும் வகையில் துறைகள்தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு அதிக அள வில் முதலீடுகளை ஈர்க்கும் வகை யில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகி றது. இந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த மாதம் வரை 600-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பதிவு செய்திருந்தன. தற்போது தொடர்ந்து பல முதலீட்டாளர்கள் பதிவு செய்து வருவதாக கூறப் படுகிறது.

மாநாட்டில் பங்கேற்கும் வெளி நாடுகள் மற்றும் வெளிமாநிலங் களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு தொழில் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு விரைவாக அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை தொழில்துறை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தொழில் தொடங்க தேவைப்படும் அனைத்து நிர்வாக ரீதியான அனுமதிகளையும் 30 நாட்களுக்குள் ஒற்றைச்சாளர முறையில் வழங்க முடிவு செய் யப்பட்டுள்ளது.

தொழில் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்கள், இதற்காக பிரத்யேகமாக தயாரிக் கப்பட்டுள்ள விண்ணப்பப் படி வத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவ ணங்களை இணைத்து, தமிழ்நாடு தொழிற்சாலைகள் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பின் அனுமதி வழங்கும் பிரிவிடம் அளிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து வருவாய், மின்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அனுப்பி தடையில்லா சான்று பெற்றுத் தந்து, 30 நாட்களுக்குள் தொழில் தொடங்க அனுமதி வழங்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

இந்த நடைமுறைகளை எளி தாக்கவும், விரைவாக அனுமதி பெற்றுத்தருவதை உறுதிப்படுத் தவும் துறைதோறும் சிறப்பு அதி காரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.சம்பந்தப்பட்ட துறைகளும் இதற்காக தனி அதி காரிகளை நியமித்து, விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு அதிகாரி நியமனம் மற்றும் 30 நாட்களுக்குள் அனுமதி வழங்குவது தொடர் பான உத்தரவுகளை தொழில் துறை செயலர் சி.வி.சங்கர் பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in