

அதிகரித்து வரும் சைபர் கிரைம் களை முன்கூட்டியே தடுக்க நவீன தொழில்நுட்பங்கள் தேவை என்று ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தி யுள்ளார்.
ஆசிய குற்றவியல் சங்கம், இந்திய குற்றவியல் சங்கம் மற்றும் டிஜிட்டல் தடய அறிவியல் சிறப்பு மையம் சார்பில் சைபர் கிரைம்களை கையாளுவது தொடர்பான 2 நாள் சர்வதேச மாநாடு சென்னை பல் கலைக்கழகத்தில் நேற்று தொடங் கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:
அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமானது வியக்கத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. இதனால் நன்மைகள் பெருகும் அளவுக்கு குற்றங்களும் பெருகியிருப்பது கவலை அளிக்கிறது. சைபர் கிரைம் கள் அதிகரித்து வருவது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தகவல் தொழில் நுட்பத்துறையில் சைபர் கிரைம்கள் சர்வ சாதாரண மாக நடக்கின்றன. அதிகரித்து வரும் சைபர் கிரைம்களை தடுக்க புதிய அதிநவீன தொழில்நுட்பங்கள் அவசியம்.
உலக அளவில் அதிகளவு சைபர் கிரைம்கள் நடக்கும் 20 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. சைபர் குற்றவாளிகளின் கவனம் கணினிவழி தகவலில் இருந்து தற் போது தகவல் தொகுப்பு பக்கம் திரும்பியிருக்கிறது. எனவே, கணினி, நெட்வொர்க்கிங், தகவல் தொகுப்பு, வயர்லெஸ் தொழில் நுட்பம் ஆகியவற்றில் சைபர் கிரைம்கள் நிகழாமல் முன்கூட்டியே தடுக்க புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர்.தாண்டவன், பதிவாளர் பா.டேவிட் ஜவகர் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். டிஜிட் டல் தடய அறிவியல் சிறப்பு மையத் தின் தலைவர் ராம கே.சுப்பிர மணியன் அறிமுகவுரை ஆற்றினார். முன்னதாக, மையத்தின் இயக்குநர் (கல்வி) பேராசிரியர் ஆர்.திலகராஜ் வரவேற்றார். நிறைவாக, நிர்வாக இயக்குநர் ஆஞ்சநேயலு ஓரா நன்றி கூறினார்.