Published : 06 May 2015 07:56 AM
Last Updated : 06 May 2015 07:56 AM

உணவு பாதுகாப்பு - தரநிர்ணய சட்டத்தை மாற்ற வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய வணிகர் தினம் - வணிக விரோத சட்டங்கள் எதிர்ப்பு மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் “32-வது வணிகர் தினம் - வணிக விரோத சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு” சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள விஜிபி திடலில் நேற்று காலை 8.45 மணிக்கு தொடங்கியது. பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.மோகன், பொருளாளர் கோவிந்தராஜூலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.அமல்ராஜ் கொடி ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் பி.சி.பார்டியா, பொதுச்செயலாளர் பிரவீண் கண் டேல்வால், சேர்மன் (குஜராத்) மகேந்திர ஷா உட்பட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த வணிகர் சங்க தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை யாற்றினர். சிறப்பு விருந்தினர் களாக தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோஷம் (விஜிபி குழுமம்), ஆர்.மனோகரன் (ரூபி பில்டர்ஸ்), ஏ.டி.பத்மசிங் ஐசக் (ஆச்சி மசாலா), தமிழ்நாட்டு ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் எம்.வெங்கடசுப்பு ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற 48 மணி நேரத்தில் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்திருந்தது. அதை சட்டப்பூர்வமாக்கும் வகை யில் நாடாளுமன்றத்தில் தீர்மான மாக நிறைவேற்ற வேண்டும். வணிகர்களுக்கு கடன் வழங்க முத்ரா வங்கியை ஏற்படுத்தியும், 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் இன் சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்து வதாக அறிவித்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைக்க வேண்டும்.

லஞ்சம் வாங்கும் அதிகாரி களின் செயல்களை சட்டபூர் வமாக கட்டுப்படுத்தி வணிகர் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாநில, மாவட்ட வாரி யாக வணிகர்கள் சட்ட வல்லு னர்கள் கொண்ட லஞ்ச ஒழிப்பு வணிக பாதுகாப்பு செயலாக்க குழு பேரமைப்பு சார்பில் அமைக் கப்படும். தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை தனித்துறையாக்கி சீரமைக்க வேண்டும் என்பது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா பேசுகையில், “இந்த மாநாட்டு கூட்டம் அரசியல் கட்சிகளைப் போல காசு கொடுத்து அழைத்து வந்த கூட்டம் அல்ல. தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து வந்துள்ளனர். மாநாட்டுக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று மாநாடு நடத்துகிறோம். தமிழகம் முழுவதும் இரவு 12 மணி வரை வியாபாரிகள் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x