Published : 04 May 2015 08:05 AM
Last Updated : 04 May 2015 08:05 AM

எங்களை மாற்றிக்கொண்டாலும் சமூகம் அங்கீகரிக்க மறுக்கிறது: திருநங்கைகள் ஆதங்கம்

நாங்கள் எங்களை எவ்வளவு மாற்றிக்கொண்டாலும் சமூகம் எங்களை அங்கீகரிக்க மறுக்கிறது என விஎச்எஸ் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

விழுப்புரத்தில் விஎச்எஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அகில இந்திய பத்திரிகை, ஊடக நண்பர்கள்-திருநங்கைகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருநங்கைகள் கூறியதாவது: ஒருவர் திருநங்கையாக மாறியவுடன் அடைக்கல மாகும் தலைவியே அவரின் வாழ்க்கையை தீர்மானிக்கிறார். விருப்பமில்லாமல் அவர் காட்டும் திசையில் பயணிக்கவேண்டிய நிலையில் திருநங்கைகள் உள்ளனர். நாங்கள் எங்களை எவ்வளவு மாற்றிக்கொண்டாலும் சமூகம் இன்னமும் முழுமையாக அங்கீகரிக்க மறுக்கிறது.

மற்ற மாவட்டங்களில் திருநங் கைகளுக்கு அரசு அளிக்கும் வீட்டு மனைகள் இன்னமும் சென்னையில் வழங்கப் படவில்லை. திருநங்கை களும் நம்மில் ஒருவர்தான் என பாவிக்கும் நிலை ஏற்படவில்லை என்று தங்களின் வாழ்வியல் சிக்கல்களை பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் பேசிய பத்திரிகை யாளர்கள், ஆண்டுக்கு ஒரு முறை இங்கு கூடி ஊடகம் முன்பு பேசும் நீங்கள் உங்கள் பகுதி பத்திரிகையாளர்களை அடிக்கடி சந்தித்து உங்கள் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். இந்நாட்டில் போராடிதான் எதையும் பெறவேண் டிய சூழலில் வாழ்கிறோம்.

கூவாகம் கோயிலில் செலுத்தப்படும் காணிக்கைகளில் பெரும் பகுதி உங்கள் பணம். இதனால் கோயில் நிர்வாகக் குழுவில் உங்களை சார்ந்தவர்கள் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வையுங்கள். நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x