

10-ம் வகுப்பு தேர்வில் வாணி யம்பாடி அல்உதா மெட்ரிக் பள்ளி மாணவி பசிஹாசுமன் உருது பாடத் தில் 100-க்கு 99 மதிப்பெண் கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர்.
இது குறித்து மாணவி பசிஹாசு மன் கூறியதாவது:
மாநில அளவில் ஒரு பாடத்தில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக் கிறது. வகுப்பு ஆசிரியர், பெற் றோர் கொடுத்த ஊக்கத்தால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
இந்த வெற்றிக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி. எதிர்காலத்தில் ஐஎப்எஸ் படிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார். பசிஹாசுமன் பெற் றோர் வாணியம்பாடி இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர்களாக பணி யாற்றி வருகின்றனர்.
10-ம் வகுப்பு தேர்வில் பசிஹாசு மன் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: மொழிப்பாடம் 99, ஆங்கிலம் 99, கணிதம் 99, அறிவியல் 99, சமூக அறிவியல் 99 என மொத்தம் 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.