மேற்கு தொடர்ச்சி மலையில் அழியும்தருவாயில் 586 வகையான தாவரங்கள்: பசுமை வீட்டில் பராமரிக்கும் மாணவர்கள்

மேற்கு தொடர்ச்சி மலையில் அழியும்தருவாயில் 586 வகையான தாவரங்கள்: பசுமை வீட்டில் பராமரிக்கும் மாணவர்கள்
Updated on
2 min read

மேற்கு தொடர்ச்சி மலையில் அழியும் தருவா யில் உள்ள 586 வகையான தாவரங்களை காந்தி கிராமம் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்து, பசுமை வீட்டில் (கிரீன் ஹவுஸ்) பாதுகாத்து வருகின்றனர். இச்செடிகளை மீண்டும் வனப்பகுதியில் நட்டு, சோலைக்காடு களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளனர்.

உலக அளவில், மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில்தான் அதிக அளவு சோலைக்காடு கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் முது மலை, முக்குர்த்தி, பழநி மலையில் கொடைக் கானல், கோவை மாவட்டத்தில் ஆனைமலை, நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியர் மலையில் அதிக அளவு சோலைக்காடுகள் உள்ளன.

கொடைக்கானலில் செண்பகனூர், டைகர், குண்டாறு, தேன், குண்டாத்து, பெரியகானல், கோவிலாறு, மதிகெட்டான், வட்டக்கானல், ஜமீன்தார், காட்டுமாடு ஆகிய இடங்களில் சோலைக்காடுகள் உள்ளன. இந்த மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில், 586 வகையான தாவரங்கள் அழியும் தருவாயில் உள்ளதாக, ஐ.நா. சபையின் இயற்கை பாதுகாப்பு பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து காந்தி கிராமம் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ஆர். ராமசுப்பு ‘தி இந்து’விடம் கூறியதாவது: தமிழகத்தில் 30 சோலைக் காடுகள் உள்ளன. குட்டையான மரங்களும், புல்வெளிகளும் சேர்ந்ததுதான் சோலைக்காடுகள். இக்காடுகள் நீர்வள ஆதாரத்துக்கு உதவுகின்றன. சோலைக்காட் டில் உள்ள மரங்கள் வேரில் மழை நீரை சேமித்து வைத்து சிறிது சிறிதாக வெளியேற் றும். புல்வெளியில் பஞ்சு போன்ற அமைப்பும் மழை நீரை சேமிக்கும். சோலைக்காட்டின் மண் பரப்பும் மழை நீரைச் சேமிக்கும். இந்த நீர் ஆதார அமைப்புகள் மூலம்தான் அருவிகள், ஆறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.

தற்போது அருவிகள், ஆறுகளில் வறண்டு போனதற்கு சோலைக்காடுகளின் அழிவும் ஒரு காரணம். சோலைக்காடுகள் அழிவதால் மழைப்பொழிவும், வன விலங்குகளின் எண் ணிக்கையும் குறைகிறது. அரியவகை தாவரங் கள் தண்ணீர் இல்லாமல் அழிகின்றன.

தமிழகத்தில் 17 சோலைக்காடுகளில் மாணவர்களுடன் நேரடியாக கள ஆய்வு செய்து அழியக்கூடிய 586 வகையான தாவரங்களை சேகரித்துள்ளோம். 63 புல் வகை தாவரங்கள், 52 தொற்று தாவரங்கள், 316 புதர் மற்றும் குறுஞ்செடிகள், 216 சோலைக்காட்டு மரங்களும் அடங்கும். இவற்றை வளர்க்க பல்கலை.வளாகத்தில் ‘பசுமை வீடு’ உருவாக்கியுள்ளோம்.

பசுமை வீட்டை பொதுமக்கள், மாண வர்களை பார்வையிட வைத்து சோலைக் காடுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள் ளோம் என்றார்.

காந்திகிராமம் பல்கலை. வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘பசுமை வீட்டில்’ மாணவர்களால் பாதுகாக்கப்படும் அழியும்தருவாயில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தாவரங்கள்.

சுற்றுலாவால் அழியும் சோலைக்காடுகள்

உதவி பேராசிரியர் ஆர்.ராமசுப்பு மேலும் கூறும்போது, சோலைக்காடு களை அழியாமல் பாதுகாக்க மட்டுமே முடியும். ரோடா பிர்டஸ், குறிஞ்சி, ரோடோ டென்ரான், எக்ஸாக்கம் இம்பேசியன்ஸ் உள்ளிட்ட தாவரங்கள் இருக்கிற இடத்தில் கண்டிப்பாக சோலைக்காடுகள் இருந்திருக்க வேண்டும். தற்போது இந்த தாவரங்கள், கொடைக்கானல் பைன் பாரஸ்ட், கூக்கால் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு உள்ளன. அதனால், அந்த இடங்களில் சோலைகள் அதிக அளவு இருந்து தற்போது அழிந்துள்ளன.

சுற்றுலாப் பயணிகள் வீசும் பிளாஸ்டிக் பொருட்கள், வேட்டில், பைன், யூகலிப்டஸ், அக்சேசியா உள்ளிட்ட அந்நிய மரங்கள், களைச்செடிகள் சோலைக்காடுகள் அழிவுக்கு முக்கியக் காரணம். பைன் மரங்களில் இருக்கும் ஒருவகை வேதியியல் பொருள், மரங்களுடைய முளைப்புத் திறனை குறைக்கிறது. வனப்பகுதியில் காபி, நறுமணப் பயிர்கள் சாகுபடியாலும் சோலைக் காடுகள் அழிகின்றன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in