வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் முடக்கம்: அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் அவதி

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் முடக்கம்: அரசு வேலைக்கு விண்ணப்பிப்போர் அவதி
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம், கடந்த மூன்று நாட்களாகச் செயல்படாமல் முடங்கி உள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் ஆய்வக உதவியாளர் உட்பட பல்வேறு அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர், வேலைவாய்ப்பு அலுவலக விவரங்களை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் கணினி மயமாக் கப்பட்டு, ஆன் லைனில் இணைக் கப்பட்டுள்ளன. அதனால், தற் போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி படித்த மாணவ, மாணவிகள், வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்குச் செல்லாமல் கல்வித் தகுதியை ஆன்லைன் மூலம் பதிவு செய்கின்றனர். இதற்காக, தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம், tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

இந்த இணையதள முகவரியை, கூகுளில் பதிவிட்டால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் நுழையலாம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை முதல் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் tnvelaivaaippu.gov.in முடங்கி உள்ளது.

தற்போது கல்வித்துறை மூலம், தமிழகம் முழுவதும் 4,600 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 676 பணியிடங்களுக்கும் தேர்வாளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக இணையதள முகவரியில், பதிவுமூப்பு விவரங்களை தெரிந்துகொள்ளவும், அவற்றை பதிவிறக்கமும் செய்கின்றனர். ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வேலைவாய்ப்பு அலுவலக இணையதளம் முடங்கியதால் தமிழகம் முழுவதும் தேர்வாளர்கள், ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாமலும், வேலைவாய்ப்பு அலுவலக விவரங்களை தெரிந்துகொள்ள முடியாமலும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீசனிடம் கேட்டபோது, பிளஸ் 2 கல்வித் தகுதியை ஆன்லைனில் பதிவுசெய்ய, இந்த முறை புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதை அப்லோடு செய் வதற்கான பரிசோதனை முயற்சி நடக்கிறது. அதனால், தமிழகம் முழுவதும் இப் பிரச்சினை உள்ளது. விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in