

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (சிஇஓ) ஆக இருந்தவர் பிரவீண் குமார். கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இவர் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 6 மாதங்களாக இப்பணி யில் இருந்த பிரவீண்குமார் மத்திய அரசின் உயர்கல்வித்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார். தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ள பிரவீண்குமாரின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரி அனிதா பிரவீண் தமிழக அரசு பணியில் இருந்து சமீபத்தில் மத்திய வணிகத்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.