

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தமிழ்நாடு உழவர் பேரியக் கத்தின் சார்பில் அனைத்து விவ சாயிகள் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சென்னை அரும்பாக்கத்தில் நேற்று நடந்தது. பாமக நிறுவனரும், பேரியக்கத்தின் நிறுவனருமான ராமதாஸ் தலைமை வகித்தார்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் விவசாயிகள் சங்கங்களின் தலை வர்கள் கலிவரதன், நல்லசாமி, வேட்டவலம் மணிகண்டன், பி.ஆர்.பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசும் போது, “தமிழகத்தில் விவசாயி களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி வருகிறது. நம்மாழ்வார் விவசாயிகளின் நலனுக்காக பெரிதும் பாடுபட்டார் மத்திய அரசும், மாநில அரசும் விவசாயி களுக்காக தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்கு வித்து விளை நிலங்களை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் 15 மாவட்டங்களின் பாசன ஆதாரமாக திகழ்வது காவிரி ஆறுதான். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக் காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
அதற்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.
விவசாயம் லாபம் இல்லாத தொழிலாக மாறி வரும் நிலையில், வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கினால்தான் உழவர்களுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்கும். நாடு முழுவதும் தேசிய வங்கி களில் மத்திய அரசின் மானிய உதவியுடன் வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு களாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள் ளனர். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், காவிரி பாசன மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் வாங்கிய பயிர்க் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்த வேண்டும். விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.400 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு, உற் பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.