Published : 30 May 2015 02:16 PM
Last Updated : 30 May 2015 02:16 PM

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியது:

மோடி தலைமையிலான மோடி அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் 98 ஒன்றியங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வறட்சிக் காலங்களில் இந்த திட்டத்தால் பலனடைந்து வந்த ஏழை விவசாயிகள், தற்போது வருவாயின்றித் தவிக்கின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டில் மதவாத, சாதிய சக்திகள் தலைதூக்கியுள்ளன.

தமிழகத்தில் உற்பத்தியாகும் பால் முழுவதையும் அரசே கொள்முதல் செய்யவேண்டும்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகாரிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்ட பின்னரும், தமிழக அரசு மவுனமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனவே, தமிழகத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளதைப்போல லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதால், ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x