

பிரதம மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா மற்றும் பிரதம மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா ஆகிய திட்டங் களின் கீழ் தனது வாடிக்கை யாளர்களுக்கு காப்பீட்டு பயன் களை வழங்கும் வகையில் பஜாஜ் அலையன்ஸ், எல்ஐசி ஆகிய நிறுவனங்களுடன் கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது.
இது குறித்து வங்கியின் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி கே.வி.ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்ஐசி) செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கேவிபி வாடிக்கையாளர் களுக்கு ஆண்டுக்கு ரூ.330 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் அளவுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும். 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.
அதேபோல பஜாஜ் அலை யன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் (பாஜிக்) நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந் தத்தின்படி கேவிபி வாடிக்கை யாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 பிரீமியத்தில் விபத்து காப்பீடு கிடைக்கும். வாடிக்கையாளர் விபத்தில் இறந்தாலோ, முழு உடல் ஊனம் ஏற்பட்டாலோ ரூ.2 லட்சமும், குறிப்பிட்ட உறுப்பில் ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சமும் இழப்பீடு பெற முடியும். 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம்.
இந்த திட்டங்களுக்கான சேர்க்கை நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இத்திட்டங்களில் சேரலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த விண்ணப்பத்தை புதுப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து தானாகவே பிரீமியத் தொகையை பிடித்தம் செய்யும் வசதியும் உண்டு என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.