

பழநி அம்மா உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பெண் ஊழியர்கள் காயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 201 அம்மா உண வகங்கள் திறந்துவைக்கப்பட்டன. அதில், பழநி பஸ் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த அம்மா உணவக மும் ஒன்று. இந்த உணவகத்தில் நேற்று மதியம் உணவு தயார் செய்வதற்கு தாமதமானதால் 1 மணி வரை உணவு வழங்கப்பட வில்லை. மலிவு விலை உணவு சாப்பிடுவதற்கு பொதுமக்கள், தொழிலாளர்கள் ஏராளமானோர் உணவகம் முன் திரண்டனர். அத னால், ஊழியர்கள் அவசரமாக உணவுகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது சமையல் செய்து கொண்டிருந்த பெண் பணியாளர் கள் காவேரி (47), வீரமணி (40), மகேஷ்வரி (43), காஞ்சனா (42) ஆகிய 4 பேரும் அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப் பட்டனர். இதில் அவர்கள் மயக்க மடைந்தனர். அதிர்ச்சியடைந்த மற்ற பணியாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவ மனையில் அவர்களை சேர்த்தனர்.
இதுகுறித்து நகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியது: தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் சிறப்பு பொறியாளர்களைக் கொண்டு கட்டப்பட்டது. பழநியில் மட்டும் உள்ளூர் ஒப்பந்ததாரர் களை கொண்டு கட்டப்பட்டது. அவர்கள் தரமில்லாமல் கட்டிடங் களை கட்டியுள்ளனர். மின்சாதனப் பொருட்கள், மின்வயர்கள் பாதுகாப்பில்லாமல் உள்ளன. அதனால் விபத்து நடந்துள்ளது.
தமிழக அரசு உயர் அதிகாரிகள், ஆட்சியர் அடங்கிய குழு அமைத்து கட்டிடத்தை ஆய்வு செய்து கட்டிடப் பணியில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து பழநி நகராட்சித் தலைவர் வேலுமணியிடம் கேட்டபோது, கட்டிடம் அருகே தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த தண்ணீரில் மின்சாரம் கசிந்துள்ளது. இது தெரியாமல் தண்ணீரை மிதித்த ஊழியர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர் என்றார்.