முக்கிய சாலைகளின் குறுக்கே மக்கள் செல்வதை தடுக்க தடுப்பு சுவர் 4 அடியாக உயர்த்தும் பணி தீவிரம்

முக்கிய சாலைகளின் குறுக்கே மக்கள் செல்வதை தடுக்க தடுப்பு சுவர்  4  அடியாக உயர்த்தும் பணி தீவிரம்
Updated on
1 min read

சென்னையில் உள்ள முக்கிய சாலை களில் மக்கள் சாலை குறுக்கே செல்வதை தடுக்க 4 அடி உயரத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் உள்ள முக்கிய மான சாலைகளான ஜி.எஸ்.டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, ஆற்காடு சாலை, ஆவடி சாலை உட்பட பல்வேறு சாலைகளின் நடுப்பகுதி யில் தடுப்பு சுவர்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், செடிகள் வைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. நடுப்பகுதியில் உள்ள இடம் கொஞ்சம் பெரியதாக இருப்பதால், சிலர் அதில் தூங்குகின்றனர். இன்னும் சிலர் அதில், அமர்ந்து கொள்கிறார்கள். சிலர் தடுப்பை தாண்டி சாலையை கடந்து செல்கி றார்கள். இவர்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.

இதனால் தடுப்பு சுவர் களை மாற்றியமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது:

ஏற்கனவே இருக்கும் தடுப்பு சுவர்களில் நடுவில் இடம் கொஞ்சம் அதிமாக இருப்பதால், சிலர் அதில் தூங்குகிறார்கள். மேலும், இந்த வகையான தடுப்பு சுவர்களை கண்காணிக்கவும், பராமரிக்கவும் செலவுகள் அதிகமாகின்றன. மேலும், பாதசாரிகள் சாலையை குறுக்கே சென்று கடக்க முயல் கிறார்கள். எனவே ஒரு சில இடங் களில் உள்ள தடுப்பு சுவர்களை மாற்றியமைக்க முடிவு செய்துள் ளோம்.அதன்படி, புதிய வகையாக (கிராஷ் பேரியர் crash Barrier) தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட வுள்ளது. இது 4 அடி உயரமாக இருக்கும். அகலமும் வெகுவாக குறைக்கப்பட்டிருக்கும். இதில், நிற்கக் கூட முடியாது. அமரவும் முடியாது. குறிப்பாக இரவில் வாகனங்களில் இருந்து வரும் ஒளி, எதிர்ப்புறம் வாகனத்தை ஓட்டி செல்பவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தாது.

அதன்படி, சென்னை யில் ஜிஎஸ்டி சாலையில் நந்தனம் முதல் சைதாப்பேட்டை வரையிலும், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலைகளிலும் புதியதாக தடுப்பு சுவர்களை அமைக்க திட்டமிட்டு ரூ.3 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணி முடிந்த பின்னர், மற்ற சாலைகளையும் தேர்வு செய்து, புதியதாக தடுப்பு சுவர்களை அமைக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in