

‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ் சார்பில் சென்னையில் சர்வதேச கல்விக் கண்காட்சி மே 2, 3 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற உள்ளது. நுங்கம் பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.
அந்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கல்வி வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கு வார்கள். ஒவ்வொரு நாட்டின் கல்வி முறை, விசா நடைமுறை, கல்வி உதவித்தொகை, மற்றும் ‘ஐஇஎல்டிஎஸ்’ தேர்வு போன்றவை தொடர்பாக வெளிநாட்டு கல்வியா ளர்கள் உரையாற்ற இருக்கிறார் கள். கண்காட்சி நடக்கும் மையத் துக்கு நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.