போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி போலீஸில் 50 பேர் புகார்

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி போலீஸில் 50 பேர் புகார்
Updated on
1 min read

சென்னை மாநகர போக்குவரத் துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக் கில் மோசடி நடந்துள்ளது என்று 50-க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத் தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத் துக்கழக பூந்தமல்லி பணிமனை நடத்துநர் பழனி, ஓட்டுநர் கேசவன். இவர்கள் இருவரும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (எம்டிசி) ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக் கில் மோசடி செய்துவிட்டதாக கூறி, 50-க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத் தில் நேற்று புகார் தெரிவித் துள்ளனர்.

இது தொடர்பாக பணம் கொடுத்து ஏமாந்த சிலர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நடத்துநர் பழனி, ஓட்டுநர் கேசவன் ஆகியோர் எம்டிசி-யில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரின் ரூ.1.50 கோடிக்கு மேல் பணத்தை வாங்கியுள்ளனர். ஓட்டுநர் வேலைக்கு ரூ.2.30 லட்சமும், நடத்துநர் வேலைக்கு ரூ.2.60 லட்சமும், மெக்கானிக் வேலைக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையும் வசூலித்துள்ளனர்.

பணம் கொடுத்து 4 மாதங் களுக்கு மேல் ஆகிவிட்டது. இது வரை வேலையை வாங்கித் தரவில்லை. நாங்கள் அனைவரும் பழனியிடம்தான் பணம் கொடுத் தோம். அவர் கேசவனிடம் பணத்தை கொடுத்துள்ளார். எங்களுக்கு வேலை வேண்டும். இல்லையேல் நாங்கள் கொடுத்த பணம் வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in