

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழுநேர எம்பில்., பிஎச்டி. படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு நேர படிப்புகள்
அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், உளவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முழுநேர எம்பில்., பிஎச்டி படிப்புகளை வழங்கி வருகிறது. இதற்கு, முதுகலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் (எஸ்சி, எஸ்டி மாணவர்கள் என்றால் 50 சதவீதம்) பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு, நேர்முகத் தேர்வு, கல்வித்தகுதி மதிப் பெண் ஆகியவற்றின் அடிப்ப டையில் மாணவர்கள் சேர்க்கப்படு வார்கள். ஸ்லெட், நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றி ருந்தால் நுழைவுத்தேர்வு எழுத தேவையில்லை. 2014-2015ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன.
ஜூலை 15-ல் நுழைவுத்தேர்வு
விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதை, “தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை” என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கி டிமாண்ட் டிராப்டாக செலுத்த வேண்டும். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) விண்ணப் பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் கட்டணத்துக்கான டி.டி.யை செலுத்திவிட வேண்டும்.
தபால் மூலம் விண்ணப்பத்தை பெற விரும்புவோர் ரூ.550-க்கு டி.டி. எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.