தேர்தலுக்குப் பின் தமாகா இருக்காது: ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆரூடம்

தேர்தலுக்குப் பின் தமாகா இருக்காது: ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆரூடம்
Updated on
1 min read

`தமிழகத்தில் வரும் சட்டப் பேரவை தேர்தலுக்குப்பின் தமாகா என்ற ஒன்று இருக்காது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

திருச்செந்தூர் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கே.டி.கோசல்ராம் மற்றும் ஏ.பி.சி.வீரபாகு ஆகியோரின் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. மதுரை மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி வெளியிட்டார். ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

விழாவுக்குப் பின் செய்தியாளர் களிடம் இளங்கோவன் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்குப்பின் தமிழ்மாநில காங்கிரஸ் என்ற ஒன்று இருக்காது. அக்கட்சி நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த சிறுகாளான். கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு கூட எந்த திட்டத்தையும் செயல்படுத் தவில்லை. தொழில்துறையில் தமிழகம் மிகப்பெரும் பின்னடவை சந்தித்திருக்கிறது.

தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நிய முதலீட்டாளர்கள் தயங்குகிறார்கள். மத்தியில் கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் பிரதமர் மோடி 20 முறை வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தி யிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த விலை உயர்வு வந்தபோதெல்லாம் பெரிதாக குற்றம்சாட்டினர்’ என்றார் அவர்.

தூத்துக்குடி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப் பாளர் ஆர்.ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in