

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழலை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவைச் சார்ந்த 500 பேர் பங்கேற்றனர்.
முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.