Published : 11 Mar 2014 12:00 AM
Last Updated : 11 Mar 2014 12:00 AM

நாடாளுமன்றத் தேர்தல்: விஜயகாந்த் 14 நாள் பிரச்சாரம்

தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை வரும் 14-ம்தேதி முதல் 27-ம் தேதி வரை 14 நாட்கள் மேற்கொள்கிறார்.

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டியில் 14-ம் தேதி மாலை 3 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார். அன்று மாலை 5 மணிக்கு கொளத்தூரிலும் இரவு 7 மணிக்கு பல்லாவரத்திலும் பேசுகிறார்.

15-ம் தேதி அரக்கோணம், ஆரணி, வேலூர், 16 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், 17 - நாமக்கல், கரூர், ஈரோடு, 18 - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், 19 - பொள்ளாச்சி, திண்டுக்கல், 20 - தேனி, மதுரை, விருதுநகர், 21 - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, 22 - தூத்துக்குடி, ராமநாதபுரம், 23 - சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், 24 - தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, 25 - சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, 26 - விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, 27 - காஞ்சிபுரம், மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x