Published : 19 May 2015 07:38 AM
Last Updated : 19 May 2015 07:38 AM

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி: பீடி தொழிற்சங்கங்கள் ஜூன் 11-ல் ஆர்ப்பாட்டம்

பீடி சுற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து நடை பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது என்று அனைத்து பீடி தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பீடி தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), மாநில தேசிய பீடி தொழிலாளர்கள் சங்கம் (ஐஎன்டியுசி), தொமுச, எப்ஐடியு ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றாக இணைந்து நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப் பதாவது:

பீடி சுற்றும் தொழிலாளர் களுக்கான சம்பளத்தை உயர்த்தக் கோரி நேற்று சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் 13-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொழிலாளர் நலத்துறையின் துணை ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் பீடி நிறுவனங்களுடன் அனைத்து பீடி தொழிற்சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, பீடி சுற்றும் தொழிலாளர் களுக்கு தற்போது 1000 பீடிகள் சுற்றினால் ரூ.95 சம்பளமாக வழங்கப்படுகிறது.

இதை ரூ.120 ஆக உயர்த்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கையை பீடி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைக் கண்டித்து அடுத்த மாதம் 11-ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து பீடி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு, வேலை யின்மையால் பாதிக்கப்பட்டு வரும் பீடி தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x