4 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது

4 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் கடந்த ஓராண்டில் சிறப்பாக செயல்பட்ட 4 எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா 2015’ விருதுகள் வழங் கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல் படும் எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருதை ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனமும் ப்ரீ சென்ஸ் என்ற இதழும் இணைந்து கடந்த 2009-ம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றன.

விவாதங்களில் பங்கேற்பது, அதிக கேள்விகள் எழுப்புவது, தனி நபர் மசோ தாக்களை அறிமுகம் செய்வது ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படுவோர், சிறந்த முதல்முறை எம்.பி. மற்றும் சிறந்த பெண் எம்.பி. ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான ‘சன்சத் ரத்னா -2015’ விருதுக்கான எம்.பி.க்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி பி.பி.சவுத்ரி, அதிக விவாதங்களில் பங்கேற்றவர் (176 விவாதங்களில் பங்கேற்பு) மற்றும் சிறந்த முதல்முறை எம்.பி. ஆகிய பிரிவுகளில் விருது பெறுகிறார்.

அதிக கேள்விகள் (314 கேள்விகள்) கேட்ட மகாராஷ்டிர மாநில சிவசேனா எம்.பி. சந்த் பார்னே ஷிரங், அதிக தனி நபர் மசோதா (11) அறிமுகப்படுத்திய ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, சிறந்த பெண் எம்.பி- யாக மகாராஷ்டிரத்தின் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சூலே ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

சென்னை ஐஐடியில் ஜூலை 11-ம் தேதி ‘அரசியல், ஜனநாயகம், நிர்வாகம்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் இவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in