Published : 07 May 2015 10:46 AM
Last Updated : 07 May 2015 10:46 AM

பிளஸ் 2 முடிவுகள்: கணிதத்தில் 9,710 பேர் சதமடித்து சாதனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கணிதப் பாடத்தில் 9,710 மாணவர்கள் சதம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கணிதத்தில் அதிக அளவு மாணவர்கள் 200-க்கு 200 பெற்றுள்ளனர். 2014-ல் 3,882 பேரும், 2013-ல் 2,352 பேரும் கணிதப் பாடத்தில் 200க்கு-200 பெற்றிருந்தனர்

கணிதத்துக்கு அடுத்தபடியாக கணக்குப் பதிவியல் பாடத்தில் 5,167 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதுதவிர இயற்பியல்- 124, வேதியியல்- 1,049, உயிரியல்-387, தாவரவியல்-75 விலங்கியல்-4, கணிதம்-9710, கணினி அறிவியல்-577, வணிகவியல்-819, கணக்குப்பதிவியல்-5,167, வணிகக் கணிதம்- 1,036 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x