

தமிழகத்தில் பல மாவட்டங் களில் வெயில் அதிகரித்து வந்தாலும், தென் மாவட்டங் களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப் பச் சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மே 5-ம் தேதி கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக் கூடும். வங்கக் கடல் மற்றும் குமரி கடல் அருகே சமீபத்தில் உரு வான காற்றழுத்த தாழ்வு நிலைகள் நீடிக்கவில்லை. தற்போது தெலங்கானா அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்தால், பரவலாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.