

கோவையில் சிஐடியு சிறப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் ஏ.கே.பத்மநாபன் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:
பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு கால ஆட்சியில், மக்களுக்கான எந்த திட்டங்களும் நிறைவேற்றபடவில்லை. வெற்று முழக்கங்களும், விளம்பரங்களுமே பாஜக அரசின் ஓராண்டு சாதனை யாக உள்ளது. எந்த ஒரு அரசும் செய்யாத அளவில் தொழிலாளர் விரோதப்போக்கினை இந்த ஒரே ஆண்டில் செய்திருக்கிறது. சர்வ தேச, தேசிய பெருநிறுவனங் களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தம் செய்கிறது. இ
தன் ஒருபகுதியாகவே 44 தொழிலாளர் சட்டங்களை, 5 சட்டங்களாக சுருக்குவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. பாஜக அரசின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வரும் 26-ம் தேதி டெல்லியில் அகில இந்திய அளவிலான மாநாடு ஒன்றை நடத்த உள்ளன.
அடுத்தடுத்து மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவிரமான போராட்டத்தை நடத்த இந்த மாநாடு திட்டமிட்டிருக்கிறது. அதில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
மேலும், அன்றைய தினத்தில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப்போக்கு களை கண்டித்து தமிழகம் தவிர்த்து நாடு முழுவதும் கொள்கை உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களிலும் வரும் ஜூன் 9-ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.