

பிளஸ் 2 தேர்வில் சென்னை மாவட்டத்தில் முதல் 3 இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள மெரிட் பட்டியலில் கூறப்பட்டு இருப்பதாவது:
கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.அபிநயா, அண்ணா நகர் ஜெஜிவிவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஏஎஸ்எம்.சுந்தரி, என்.நம்ரதா ஆகியோர் 1,200-க்கு 1,183 மதிப்பெண் பெற்று சென்னை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இதேபோல், பெரியார் நகர் பெரியார் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.ஸ்ரீநந்தினி, கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.லட்சுமி, தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ரேவதி ஆகியோர் 1,182 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தை பிடித்துள்ளனர்.
தண்டையார்பேட்டை முருக தனுஷ்கோடி பள்ளியின் மற்றொரு மாணவி டி.யமுனா, விருகம்பாக்கம் பாலலோக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏஆர்.வள்ளி ஆகியோர் 1,181 மதிப்பெண் எடுத்து 3-ம் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த 8 பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.