போலீஸாரின் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்: சென்னையில் 1,200 பேர் பங்கேற்பு

போலீஸாரின் குழந்தைகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்: சென்னையில் 1,200 பேர் பங்கேற்பு
Updated on
1 min read

போலீஸாரின் குழந்தைகளுக்கு சென்னை மாநகர காவல் ஆணையரகம் மூலம் கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து போலீஸாரின் பிள்ளைகளுக்கும் கோடைகால பயிற்சி முகாம் நடத்த சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தர், ஆயுதப்படை துணை ஆணையர்கள் ராஜேந்திரன், சவுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுப் போட்டிகள், குதிரையேற்றம், நீச்சல் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், இசை பயிற்சி, கணினி பயிற்சி, யோகா, கராத்தே ஆகிய 12 பிரிவுகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மே 4-ம் தேதி முதல் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதுவரை 1,200 பேர் இதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதானம், பரங்கிமலை ஆயுதப்படை மைதானம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம், நேரு விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழக மைதானம் ஆகிய இடங்களில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. துப்பாக்கி சுடும் பயிற்சி எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திலும், குதிரையேற்றம் பயிற்சி எழும்பூர் குதிரைப்படை வளாகத்திலும், டென்னிஸ் பயிற்சி வகுப்பு நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்திலும், நீச்சல் பயிற்சி வகுப்புகள் அண்ணா நீச்சல் குளம், முகப்பேர் டால்பின் நீச்சல் குளம், ஷெனாய்நகர் மற்றும் வேளச்சேரி நீச்சல் குளம் ஆகியவற்றிலும் நடத்தப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in