

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.பிரீத்தி 497 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும் மாநிலத்தில் 3-ம் இடமும் பிடித்துள்ளார். வி.மனிஷா ராஜன் 496 மதிப்பெண், டி.சுவர்ணலட்சுமி 495 மதிப்பெண் பெற்று, 2,3-ம் இடங்களைப் பெற் றுள்ளனர்.
இப்பள்ளியில் கணிதத்தில் 28 பேர், அறிவியலில் 43 பேர், சமூக அறிவியலில் 26 பேர் என மொத்தம் 97 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியின் அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி அடைந் திருப்பதோடு, அனைவரும் முதல் வகுப்புக்கு மேல், உயர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த சாதனையை சாய் மெட்ரிக் பள்ளி கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது. இந்த தொடர் வெற்றிக்காக, முதல்வர் என்.முருகேசன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர் அனைவருக்கும் பள்ளியின் தாளாளரும், சாய்ராம் பொறியியல் கல்லூரி, கல்விக் குழுமத்தின் தலைவருமான லியோமுத்து மற்றும் கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து ஆகியோர் சாதனை படைத்த மாணவிகளுக்கு வாழ்த்து களையும் பாராட்டுகளையும் தெரி வித்தனர்.
தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இ.ரம்யா, எச்.சசிகுமார் (489) முதலிடமும், ஜி.புவனேஸ்வரி, கே.சவுமியா, எம்.பி.கீர்த்திவாசன், கே.கிஷோர் (485) இரண்டாமிடமும், கே.கமலி (484) மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3 பேர், அறிவியலில் 22 பேர், சமூக அறிவியலில் 7 பேர் என மொத்தம் 32 பேர் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.