

பால் கொள்முதலை குறைக்க ஆவின் உத்தரவிட்டுள்ளதால் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் வீணாவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பாலில் 10 முதல் 18 சதவீதம் குறைத்து கொள்முதல் செய்யுமாறு கூட் டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசின் ஆவின் நிறுவனம் உத்தர விட்டுள்ளது.
இதனால் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் வீணாகிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ரூ. 12 வரை செலவாகிறது. இதனால் விவசாயிகள் சாலையிலும், தரையிலும் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
நிலம் கையகப்படுத்துதல் சட்டம், விவசாய கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு என விவசாயிகள் மீது மத்திய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறைப்பு நடவடிக்கை வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
அடித்தட்டு மக்களின் வாழ்வா தாரத்துக்காக விலையில்லா கறவை பசுக்கள், எருமைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் அரசின் கொள்கை களுக்கு எதிராக செயல்படுகிறது.
பால் கொள்முதல் குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு விவசாயிகள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.