

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்து வந்த கன மழை ஓய்ந்து விட்ட போதிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று பதிவான மழை நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மற்றும் குழித்துறையில் தலா 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆகிய இடங் களில் 3 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 2 செ.மீ., திருவண் ணாமலை மாவட்டம் போளூரில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்த 48 மணி நேரங்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். உள் மாவட் டங்களில் பலமான காற்று வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. கடந்த சில நாட்களாக இருப்பது போலவே நேற்றும் சென்னையில் வெயில் கொளுத்தியது.