

இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் சார்பில் கியூபா நாட்டின் திரைப்படத் திருவிழா சென்னை ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் நேற்று தொடங்கியது.
இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் பொதுச் செய லாளர் தங்கராஜ் இவ்விழாவைத் தொடங்கி வைத்து பேசும்போது, “திரைப்பட ரசனையை வளர்க்கும் நோக்கிலும், உலகின் சிறந்த பிற நாட்டுப்படங்களை அறியச் செய்யும் வகையிலும் இந்த விழா நடத்தப்படுகிறது. 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 5 திரைப்படங்கள் திரை யிடப்பட உள்ளன.
இந்தப் படங்கள் பல்வேறு போட்டிகளில் விருதுகளை வென்றவை என்பது குறிப்பிடத் தக்கது” என்றார்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளையின் இணைச் செயலாளர் வி.சீனிவாசன், குழு உறுப்பினர்கள் நா.ஸ்ரீராம், பட்ஜெட் லோகநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.