

திருவாரூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் திருச்சியில் உள்ள ஹோட்டலில் நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
திருவாரூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன்(35). அதிமுக பிரமுகரான இவர், நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நீண்டநேரமாகியும் அறை கதவு திறக்கப்படாமல் இருந்ததால், ஹோட்டல் ஊழியர் கள் அறையை திறந்து பார்த்தனர். அறைக்குள், இறந்த நிலையில் ராமநாதன் கிடந்துள்ளார்.
ஹோட்டல் நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில் கன்டோன் மென்ட் போலீஸார், ராமநாதனின் உடலைக் கைப்பற்றினர். அருகில் விஷ மருந்து பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், அவரது சட்டைப் பையில் இருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை, மேலும், மக்கள் முதல்வர் அம்மா எனது குடும்பத்தினரை அழைத்து, என் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும், அம்மா மீ்ண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது எனது ஆசை. எனது உடலில் கட்சிக் கொடியைப் போர்த்தி சொந்த ஊரில் தகனம் செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கன்டோன்மென்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உணர்ச்சிவசப்பட வேண்டாம்: ஜெ.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி: அதிமுக தலைமை யின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டு எனக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர் 4-வது வார்டைச் சேர்ந்த என்.ராமநாதன் விஷம் அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியறிந்து மனம் துடித்தது.
கட்சித் தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என மீண்டும் வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். ராமநாதனை இழந்து வாடும் அவர் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள் கிறேன். அவரது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதி உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.