

சிவில் நீதிபதிகளை தேர்வு செய் வதற்காக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பிறப்பித்த நிர்வாக உத்தரவை எதிர்த்து, நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவுகளுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்படுகிறது.
சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக தேர்வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். அந்த தேர்வுக் குழுவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.தனபாலன், ஆர்.சுதாகர், டி.ஹரிபரந்தாமன், என்.கிருபாகரன், ஆர்.மாலா மற்றும் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் அதிகாரிகள் இடம்பெற் றுள்ளனர். இந்த தேர்வுக் குழு கடந்த ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை சிவில் நீதிபதி பதவியிடங்களுக்கான நேர் காணலை நடத்துவதாக இருந்தது.
இதனை, உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டு உத் தரவு பிறப்பித்தார். அதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனபாலன், சுதாகர், ஹரிபரந்தாமன் ஆகியோர் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி, அவர்கள், சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம்பெற தகுதி இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தலைமை நீதிபதியின் நிர்வாக உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும், சிவில் நீதிபதிகள் பதவிக்கான நேர்காணலை நடத்தக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தலைவ ருக்கு உத்தரவிட்டார்.
நீதிபதி கர்ணனின் இந்த உத் தரவுக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் மறுநாளே தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகும், இந்த வழக்கை தானே விசாரிக்க ஏப்ரல் 30-ம் தேதி பட்டியலிடும்படி உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு நீதிபதி கர்ணன் அறிவுறுத்தினார்.
அன்றைய தினம், தனது முந் தைய உத்தரவை உறுதி செய்தத துடன், தனது நீதிமன்றப் பணியில் குறுக்கிட்டால் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும், தலித் நீதிபதியான தன்னை தலைமை நீதிபதி துன்புறுத்துவதால் அது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத் தலைவருக்கு இந்த நீதிமன்றம் அறிவுறுத்தும்.
மேற்கண்ட விவகாரம் தொடர் பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவு களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான முதன்மை பெஞ்ச் இன்று (திங்கள்கிழமை) இம்மனுவை விசாரிக்கிறது.