

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அவசரம் காட்டுகிறது.
இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அனைத்துக் கட்சி கருத்தையும் மத்திய அரசு கேட்டிருக்க வேண்டும். ஆனால், பாஜக அரசு அவ்வாறு ஆலோசிக்கவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ், தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும்.
2016 தேர்தலை எந்தக் கூட்டணியில் எதிர்கொள்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும்" என்றார்.